BOSS Search

Tuesday, 1 April 2014

குறைந்த பட்ச பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு!


வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை வைக்க தவறினால், அதற்காக அபராதம் விதிக்கக்கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

2014-15ஆம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டுப் பேசுகையில் இதனை தெரிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வாடிக்கையாளரின் கவனக் குறைவை வங்கிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கூடாது என்றும்,  வாடிக்கையாளர்களின் மீது அபராதம் விதிக்க வங்கிகளுக்கு எந்த ஒரு அனுமதியும் கிடையாது என்றும் கூறினார். 

அதே சமயம் தொடர்ந்து சில மாதங்களுக்கு குறைந்த பட்ச பேலன்ஸ்  குறைவாக இருக்கும் கணக்குகளுக்கு, படிப்படியாக சேவைகளை குறைத்துக்கொள்ளலாம் என்றும், கணக்குகளில் வைப்பு தொகை அளவிற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் முழுமையான சேவையை அளிக்கவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கிகள், குறைந்த பட்ச  பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு காலண்டிற்கு சுமார் 750 ரூபாய் வரை  அபாராதம் விதிக்கிறது. இத்தகைய வங்கிகளில் நகரபுற வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தனது கணக்கில் வைத்திருக்க வேண்டும், அதேபோல் கிராமபுற அல்லது நகராட்சி பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் 5,000 வரை வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் விதிமுறை வகுத்துள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தின் படி இனி எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளர் மீதும் அபராதம் விதிக்க முடியாது என ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

No comments:

Post a Comment