சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே. சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம். மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.
# இப்படி எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு
அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.
மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.
* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.
* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.
* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.
* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.
* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.
ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.
மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.
எனவே, நண்பர்களே...!!! மதுவை தவிர்ப்போம்...
சுய சிந்தனை பெறுவோம்..
அந்த காலத்தில் எப்படி எந்தடெக்னாலஜியும் இல்லாமகிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....